
காசியில் பல மர்மங்கள் இருந்தாலும் குறிப்பாக காசி அமைந்துள்ள வடிவமே ஒரு யந்திரதகட்டின் அமைப்பில் உள்ளது. அந்த யந்திரத்தின் மத்திய புள்ளியில் காசி விஷ்வநாதர் ஆலயம் உள்ளது. சக்திமிக்க அந்த ஆலயத்தில் உள்ள காலபைரவர் மிக முக்கியமானவர். அவர் காலடியில் காலச்சக்கரம் இருப்பதாக சொல்கிறார்கள். காசியில் இறக்க முக்தி என்று சொல்வதற்கு பின்னருள்ள Logic or science எனக்கு என்னவென்று தெரியவில்லை. ஆனால் Simply ஒரு விடயம் மட்டும் புரிகிறது. காலம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்று காசியில் தொடர்புபடுகிறது. காலத்தை சரியாக புரிந்து காலத்திற்கு சரணடைபவர்களுக்கு முக்தியுண்டு.
எனக்கு கடவுள் ஒரு ஆளா? வைரபர் ஒரு கடவுளா? என்பதெல்லாம் தெரியாது. ஆனால் கொஞ்சம் வெளியில் இருந்து வைரவ தத்துவத்தை பார்த்தால் காலம் எங்கள் வாழ்வில் முதன்மையானஒன்று. Behind the bairav we should understand the grace of time. ஏனென்றால் காலம் மட்டும்தான் எங்கள் கட்டுப்பாட்டினுள் இல்லாதவிடயம். அரசன்முதல் ஆண்டிவரை அனைவரும் பேதமின்றி காலமாற்றத்திற்கு உட்படுகிறார்கள். வாழ்வின் ஒவ்வொரு விடயங்களும் காலத்தோடு பின்னி பிணைந்ததாக உள்ளது. அதிலும் குறிப்பாக மரணம் காலத்தினுடைய மிக முக்கிய ஒரு பரிமாணம். அநேக காலபைரவ வழிபாடுகள் மரணபயத்தை நீக்குவதற்காகவே உள்ளது. காலபைரவரை சரணடைதல் என்பது காலத்திற்கு சரணடைதல் எனும் தத்துவத்தோடு சம்பந்தமானது. எப்படி காலத்திற்கு சரணடைவது? Just live the presence. முழு ஏற்புடமையோடு நிகழ்காலத்தில் வாழப்பழகுவது. இது ஒன்றே முக்திக்கு வழி என்று புத்தர் யேசு உட்பட பல மகான்களும் சொல்லியிருக்கிறார்கள். பைரவர் என்பவர் ஏன் உக்கிர வடிவம்? அவர் ருத்திரரூபம். உக்கிரவடிவம். அழிதல் எனும் அருளல். ஆகவே வழிபட்டாலும் வழிபடாவிட்டாலும் அனைவருக்கும் அழிவு நிச்சயம்.
சாஸ்திரங்களுக்கு பின்னால Logic இருக்கோ இல்லையோ நிறைய தத்துவங்கள் இருக்கிறது. குறிப்பாக ஜோதிட சாஸ்திரத்தில் சனியினுடைய குருவாக வைரவரை சொல்வதுண்டு. வைரவரை சரணடைந்தால் சனியின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் ஏனெனில் அவர் தன் குருவிற்கு கட்டுப்பட்டவர் என ஜோதிடர்கள் ஆலோசனை வழங்குவதுண்டு. அவர்கள் சொல்லும் கதை உருவகம் முட்டாள்தனம் என்றாலும் கூட காலத்திற்கு சரணடைந்தால் கர்மத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்பதே பொருள். சனி கர்மக்காரகன் + ஆயுள்காரகன். கர்மா ஆயுள் எல்லாம் காலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. நிகழ்காலத்தில் வாழத்தெரிந்தவனுக்கு கடந்தகாலம் பற்றிய கவளையோ எதிர்காலம் பற்றிய பயமோ இருக்கப்போவதில்லை. அப்படியானவனை கர்மங்கள் பாதிப்பதில்லை. அப்படிப்பட்டவன் பிறப்பு இறப்பு சக்கரங்களுக்குள் சிக்குவதில்லை. கர்மத்தின் பலாபலன்களிலில் இருந்து விடுபடுகிறான். சனியின் குருவாக வைரவரை வைத்ததிற்கு பின்னால் நிறையவே ஆழமான பொருள் உண்டு. அதை எழுதி முடிக்கேலாது.
ஆகவே காலத்திற்கு சரணடைந்தவனை காலன் ஒன்றும் செய்யமுடியாது என்பதே பைரவதத்துவம். அதாவது நிகழ்காலத்தில் வாழத்தெரிந்தவன் தன்னுள் இருக்கும் அதிஉன்னதமான ஒன்றை வாழும்காலத்தில் கண்டுகொள்கிறான். அவன் இருமைநிலைகளுக்குள் சிக்குவதில்லை. உடல் அழியுமே தவர மீளவும் அவர் கருக்குழிக்குள் விழுவதில்லை என்பதால் காலன் அவர்களை ஒன்றும் செய்யமுடியாது.
