Jun 14, 2026 · வரதராஜா கஜமுகன்

கந்தசஸ்டி விரதம் ஏன் பிடிக்கின்றோம்?

ஆறுமுகப்பெருமானுடைய விரதங்களிலே கந்தசஸ்டி விரதம் மிகவும் பிரசித்தி பெற்ற விரதமாக ஈழத்தில் இன்றும் பிடிக்கப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியாக ஆறு நாட்கள் கொண்ட இந்த‌ விரதம் குழந்தைச்செல்வம், கல்விச்செல்வம் போன்ற 16 செல்வங்களை வேண்டி இளையோர் தொடக்கம் முதியோர் வரை பிடிக்கிறார்கள். இவ்விரதத்தை தொடர்ந்து 6 வருடங்கள் பிடிக்கின்றபோது பக்தர்களின் குறைதீர்த்து முருகப்பெருமான் பாலிக்கின்றமை அனுபவ ரீதியில் உறுதிப்படுத்தப்படுகின்றது.
1985 ஆம் ஆண்டு முதல் உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்மன் கோவிலில் பிரதமகுருவாகவும் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற பல கோவில்களில் மஹோற்சவ குருவாகவும், கும்பாபிஷேகங்களின் பிரதமகுரு, சர்வ சாதகம், சர்வ போதகமாக இறை பணியாற்றி வருபவரும், கைதடி கயிற்றசிட்டி முருகனை குலதெய்வமாக பூஜித்து வருபவருமான பிரம்மஸ்ரீ. க. மு. சோமசுந்தரஐயரின் அனுபவரீதியான பதிவு. 

#Aathaaram #KandaSashti #anupavam #aanmeekam