ஆன்மீக மற்றும் வாழ்க்கைமுறை ஆராய்ச்சி சமூகம்.

நன்னெறி தேடிச் செம்மொழி
சாற்றிப் பொற் செயலாற்றும்
சான்றோர் உலகு!

எமது நோக்கம்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் அவை சார்ந்த வாழ்க்கைமுறை மரபுகளை பதிவு செய்து ஒரு சமூக அடிப்படையிலான ஆராய்ச்சி வலையமைப்பை உருவாக்குதல்.

எமது பணிகள்

ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல்

வட மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் அவை சார்ந்த வாழ்க்கைமுறை மரபுகளை தரமான ஆய்வுகள், பேட்டிகள், புலத் தரவு சேகரிப்பு மூலம் பதிவு செய்து பாதுகாப்பது.

அறிவுப் பகிர்வு மற்றும் செயல்படுத்தல்

சக அமைப்புகளோடு இணைந்து ஆய்வின் மூலம் பெறப்பட்ட அறிவை சமூக செயல்பாட்டாளர்கள், இளைஞர்கள், ஆன்மீக அமைப்புகள், கல்விக்கூடங்களுக்கு பகிர்ந்து அவற்றை செயல்படுத்த ஒத்துழைத்தல் 

ஆன்மீக அறிவுத்தேடலை ஊக்குவித்தல்

சிறந்த ஆய்வுகளை கெளரவித்தல், பாடசாலை மட்டங்களிலிருந்தே ஆய்விற்கான‌ போட்டிக்களங்களை உருவாக்குதல், ஆய்வினை இலகுவில் செய்வதற்கு மிகச்சிறந்த தரவுத்தளத்தையும் தொழினுட்பத்தையும் உருவாக்குதல்

எமது குழு

ஆதரவை கொடுங்கள்

ஆன்மீக அறிவை வளர்ப்போம் – வாழ்வியலை உயர்த்துவோம்!